இணையவழி பட்டா மாற்றத்திற்கு விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்
சில நேரங்களில் இணையவழி பட்டா மாற்றத்திற்கு வரப்பட்ட விண்ணப்பங்களில் பரிசீலனை செய்ய தேவையான ஆவணங்கள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அவற்றை திரும்ப இணைக்கும் பொருட்டு விண்ணப்பதாரருக்கு குறுச்செய்தி அனுப்பப்படும்.
அதன் வாயிலாக விண்ணப்பதாரர் அனைத்து கேட்கப்பட்ட ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே மீண்டும் கிராம நிர்வாக அலுவலர் அல்லது நில அளவர் அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய இயலும்.
விண்ணப்பதாரர் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி பதிவேற்றம் செய்யலாம்.
1. விண்ணப்பதாரர் தங்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரியை உள்ளிடவும்.
2. பின்பு குறுஞ்செய்தியில் அல்லது ரசீதில் உள்ள விண்ணப்ப எண்ணை உள்ளிடவும்.
3. DISPLAY DETAILS பொத்தானை கிளிக் செய்யவும். பின்பு வரக்கூடிய விண்ணப்பதாரர்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு CONFIRM பொத்தானை கிளிக் செய்யவும்
4. விண்ணப்பதாரர் கைப்பேசிக்கு வரப்பெற்ற OTP எண்ணை உள்ளிடவும். பின்பு VERIFY OTP பொத்தானை கிளிக் செய்யவும்
5. கேட்கப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவேற்றவும் (மனுதாரர்கள் அதிகபட்சம் 2 MBக்கு மிகாமல் PDF கோப்புகளாக பதிவேற்றம் செய்யவும்)
0 Comments
Provide Your Feedback. Thanks