SSS - OAP - Schemes - Eligibility Criteria

 சமூக பாதுகாப்பு திட்டங்கள்

1. இந்திரா காந்தி முதியோர் தேசிய ஓய்வூதிய திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 60 வயது அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

2. இந்திராகாந்தி மாற்றுத் திறனுடையோர் தேசிய ஓய்வூதிய திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.  
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.  
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.  
  • ஊனம் நிலை 80% மற்றும் அதற்கு மேல் இருத்தல்  வேண்டும்.

3. இந்திராகாந்தி விதவைகள் தேசிய ஓய்வூதிய திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும். 
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
  • விதவையாக இருத்தல் வேண்டும்.

4. ஆதரவற்ற மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.  
  • ஊனம் நிலை 40% மற்றும் அதற்கு மேல் இருத்தல் வேண்டும். 

5. ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய த் திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.   
  • விதவையாக இருத்தல் வேண்டும்.

6. ஆதரவற்ற  கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும். 
  • சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

7. திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும். 
  • 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும். 
  • திருமணமாகாத  பெண்ணாக இருத்தல் வேண்டும்.

8. முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

  • ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
  • 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும்.
  • நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு : 
  • இணையதளத்தில் விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகவும்
  • சேவை கட்டணம் - ரூ.  10 /- 

Reactions

Post a Comment

0 Comments